TNPSC Thervupettagam

வக்ஃபு வாரியம் – ஓய்வு பெற்ற நீதிபதி சாகியுல்லா கான் குழு

July 31 , 2019 2114 days 669 0
  • மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மத்திய வக்ஃபு ஆணையத்தின் தேசியக் கருத்தரங்கை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • தற்பொழுதைய அரசின் முதல் 100 நாட்களில் நாடெங்கிலும் உள்ள வக்ஃபு வாரியச் சொத்துகளை 100 சதவிகிதம் டிஜிட்டல் மயமாக்குவதே மத்திய அரசின் இலக்கு என்று இவர் அறிவித்துள்ளார்.
  • மேலும் ஓய்வு பெற்ற நீதிபதியான சாகியுல்லா கான் குழுவானது வக்ஃபு சொத்துகளை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

இதுபற்றி

  • வக்ஃபு என்பது பெருந்தன்மையுள்ள முஸ்லீம்களால் கடவுளின் பெயரில் தானமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய சொத்தாகும்.
  • இந்தச் சொத்துகளினால் ஈட்டப்படும் வருமானம் ஏழைகளின் நலனுக்காகப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப் படவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்