TNPSC Thervupettagam

வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025

September 18 , 2025 27 days 93 0
  • உச்ச நீதிமன்றம் ஆனது, 2025 ஆம் ஆண்டு வக்ஃப் (திருத்தம்) சட்டத்தின் 'கொடுங்கோன்மையான' பகுதிகளை நிறுத்தி வைத்தாலும், அந்தச் சட்டத்தினை நிலை நிறுத்துகிறது.
  • சரிபார்ப்பு முறைகள் இல்லாததால், இஸ்லாமியத்தைப் பின்பற்றுவதற்கான ஆதாரம் அவசியம் என்ற விதியை ஐந்து ஆண்டுகளுக்கு நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
  • விசாரணைக்கு முன், அரசாங்க உரிமதத்தின் மீதான வெறும் சந்தேகத்தின் பேரில் வக்ஃப் அந்தஸ்து இழப்பை அனுமதிக்கும் விதியை அது ரத்து செய்தது.
  • சொத்து உரிமைத் தகராறுகளை நிர்வாக அதிகாரிகள் பதிவுகளை மாற்றுவதன் மூலம் அல்லாமல் நீதித்துறைதான் தீர்க்க வேண்டும்.
  • தீர்ப்பாயத் தீர்ப்புகள் முடிவு செய்யப்படும் வரை வக்ஃப் அமைப்புகளை அகற்றவோ  அல்லது பதிவுகளை மாற்றவோ முடியாது.
  • மத்திய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் எண்ணிக்கையில் நீதிமன்றம் வரம்பிட்டது மற்றும் முஸ்லிம் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
  • வக்ஃப் வாரியங்களின் கட்டாயப் பதிவு உறுதி செய்யப்பட்டது என்ற நிலையில் பதிவு செய்யப்படாத வக்ஃப் வாரியங்கள் இன்றும் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்