தற்பொழுது பகுதியளவு பணிக் காலத்தை நிறைவு செய்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் 1800 வங்க தேச குடிமைப் பணி அதிகாரிகளுக்கு 2019-2025ற்கு இடையிலான கால கட்டத்தில் முசோரியில் உள்ள தேசிய நல்லாட்சி மையத்தில் பயிற்சியளிக்கப்பட உள்ளது.
30 குடிமைப் பணி அதிகாரிகளைக் கொண்ட முதல் குழுவானது முசோரியில் 2 வாரம் நடைபெறக் கூடிய பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றது. இக்குழு டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையர் அலுவலத்திற்குச் சென்றுள்ளது.
இது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.