வங்க தேசத்திலிருந்து முதலாவது உள்நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்து
September 9 , 2020 1966 days 791 0
தௌகண்டி (வங்கதேசம்) – சோனமுரா (திரிபுரா) உள்நாட்டு நீர்வழி நெறிமுறைப் பாதையானது இயக்கப்பட்டு திரிபுராவானது முதலாவது உள்நாட்டு நீர்வழி சரக்குக் கப்பலை வரவேற்றுள்ளது.
உள்நாட்டு நீர்வழி வர்த்தக மற்றும் போக்குவரத்து இயக்க நெறிமுறையானது இந்தியா மற்றும் வங்க தேசத்திற்கிடையில் 1972 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
கும்தி நதியின் வழியே அமைந்த 93 கிலோமீட்டர் நீளமுடைய சோனமுரா-தௌகண்டி பாதையின் மீதான இந்த புதிய நீர் வழிப் பாதையானது போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவுள்ளது.