TNPSC Thervupettagam

வங்காள விரிகுடா மீன்வள வலையமைப்பு

November 14 , 2026 8 hrs 0 min 29 0
  • இந்தியா, இலங்கை, வங்காள தேசம் மற்றும் மாலத்தீவு ஆகியவை கொச்சியில் BOB-NOR என்ற வலையமைப்பைத் தொடங்கின.
  • இந்த வலையமைப்பு வங்காள விரிகுடா திட்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பால் (BOBP-IGO) ஒருங்கிணைக்கப்படுகிறது.
  • இது ICAR-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) தொடங்கப்பட்டது.
  • மீன்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கு செயற்கைக்கோள் தரவுகள், கடல் ஆய்வுகள் மற்றும் பருவநிலைப் படிப்புகளை இது பயன்படுத்துகிறது.
  • கடல் வெப்பநிலை உயர்வு, பருவமழை மாற்றங்கள், உவர்ப்புத்தன்மை மற்றும் கடல் நீரோட்டங்கள் மீன்வளத்தில் ஏற்படுத்தும் விளைவுகளில் இது கவனம் செலுத்துகிறது.
  • வங்காள விரிகுடாவில் அறிவியல் அடிப்படையிலான மற்றும் நிலையான மீன்வள முகமைத்துவத்திற்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்