TNPSC Thervupettagam

வங்காளதேசத் தட்டம்மை பரவல்

October 24 , 2026 15 hrs 0 min 9 0
  • 2026 ஆம் ஆண்டில் உலகின் மிக மோசமான தட்டம்மை பரவலை வங்காளதேசம் எதிர் கொண்டு வருவதுடன் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து 2.02 லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் மற்றும் 1,147 இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • தட்டம்மை என்பது மிகவும் எளிதில் பரவக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும். இது முக்கியமாகப் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது வெளியேறும் சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது.
  • தடுப்பூசி செலுத்தப்படும் விகிதம் குறைதல், பதிவு செய்யப்படாத குழந்தைகள், சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் பலவீனமான சுகாதாரத் தரவு அமைப்புகள் ஆகியவை இந்தப் பரவலுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
  • வங்காளதேசத்தில் பதிவான இறப்புகளில் சுமார் 94% இறப்புகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நிகழ்ந்துள்ளன. அதே வேளையில் சுமார் 22,000 பாதிப்புகள் ஆய்வகங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
  • தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படும் விகிதமானது 2025 ஆம் ஆண்டில் முதல் தவணைக்கு 90% ஆகவும், இரண்டாவது தவணைக்கு 86% ஆகவும் குறைந்துள்ளது. இது நோய்ப்பரவலைத் தடுக்கப் பொதுவாகத் தேவைப்படும் 95% அளவை விடக் குறைவானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்