TNPSC Thervupettagam

வங்காளதேசம் – ஹசீனாவை நாடு கடத்துவதற்கான கோரிக்கை

November 27 , 2025 16 hrs 0 min 8 0
  • முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்காளதேசத்தின் இடைக் கால அரசாங்கம் இந்தியாவிற்கு ஒரு முறையான கடிதத்தை அனுப்பியுள்ளது.
  • ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமலுக்கு மரண தண்டனை விதித்த சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று நடைபெற்ற மாபெரும் போராட்டங்களின் போது வங்காளதேசத்திலிருந்து தப்பி ஓடியதிலிருந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார்.
  • இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆனது தீர்ப்பை ஒப்புக் கொண்டாலும், நாடு கடத்தல் கோரிக்கைக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.
  • ஹசீனாவின் பதவிக் காலத்தில் அவர் காணாமல் போனதில் அவரது பங்கு குறித்து ஆராய சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) ஒரு புதிய விசாரணையைத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்