TNPSC Thervupettagam

வங்கிகளில் CASA விகிதம் சரிவு

April 8 , 2026 4 days 69 0
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் CASA (நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு) விகிதம் 37.9% ஆகக் குறைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்த அளவை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
  • CASA வைப்புத் தொகைகள் என்பது வங்கிகளில் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் வைக்கப் படும் குறைந்த செலவிலான வைப்புத்தொகைகளாகும்.
  • மக்கள் தங்களது பணத்தை பங்குகள், பரஸ்பர நிதிகள் மற்றும் தங்கம் போன்ற அதிக வருமானம் தரும் முதலீடுகளுக்கு மாற்றியதால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
  • சேமிப்புக் கணக்குகளின் பங்கு 28.9% ஆகக் குறைந்ததே ஒட்டுமொத்த CASA விகிதச் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
  • CASA விகிதம் குறைவது வங்கிகளின் நிதிச் செலவை அதிகரிக்கிறது, ஏனெனில் அவை அதிக வட்டி கொண்ட வைப்புத்தொகைகள் மற்றும் கடன்களையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
  • இது வங்கிகளின் லாபத்தைக் குறைப்பதோடு, அவற்றின் கடன் வழங்கும் திறனையும் பாதிக்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்