2025 ஆம் ஆண்டில் வணிக வங்கிகளின் நிதிச் சேவை நடவடிக்கைகள் குறித்த இறுதி வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டது.
வங்கிக் குழுக்கள், கட்டாய மறுசீரமைப்பைத் தவிர்த்து, தற்போது வாரிய ஒப்புதலுடன் கடன் நடவடிக்கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து தொடர அனுமதிக்கப்படுகின்றன.
சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களில் (ARCs) வங்கிக் குழு பங்குதாரர்களின் 20% உச்ச வரம்பு தக்க வைக்கப் பட்டுள்ளது.
வங்கிக் குழுக்களுக்குள் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கான (NBFCs) உயர் அடுக்கு ஒழுங்குமுறை விதிமுறைகள் 2028 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணங்க வேண்டும்.
வழிகாட்டுதல்கள் ஆனது வங்கிகள், NBFC மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் (HFCs) ஆகியவற்றில் ஆபத்து விதிமுறைகளைச் சீரமைப்பதன் மூலம் இணக்கம் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துகின்றன என்ற நிலையில் இது ஒழுங்குமுறை நடுவர் இடையீட்டினைத் தடுக்கிறது.