வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம் 2025 ஆனது, நிர்வாகத்தை மேம்படுத்தவும், வைப்புத் தொகையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களைப் பாதுகாக்கவும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்தச் சட்டமானது, பொதுத்துறை வங்கிகளில் தணிக்கைத் தரத்தினை மேம்படுத்துவதோடு, தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர்களைத் தவிர கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கிறது.
1968 ஆம் ஆண்டிலிருந்து மாற்றப்படாமல் இருந்த "கணிசமான வட்டி" வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர் பதவிக் காலம் ஆனது 8 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதோடு இது 97வது அரசியலமைப்புத் திருத்தத்துடன் ஒத்துப் போகிறது.
இந்தச் சட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 மற்றும் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 உட்பட ஐந்து சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட 19 திருத்தங்கள் அடங்கும்.