இந்தியாவின் வங்கித் துறையானது வாராக் கடன்களில் (NPA) கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவிலும், சமீபத்திய ஆண்டுகளில் வலுவான இலாப வளர்ச்சியையும் பதிவு செய்தது.
மொத்த வாராக் கடன்கள் (NPA) 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2.31% ஆகக் குறைந்துள்ளது என்பதோடுஇது கடந்த 20 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.
நிகர வாராக் கடன் 0.52% ஆகக் குறைந்து, சிறந்த மீட்பு மற்றும் இடர் கட்டுப்பாட்டைக் காட்டுகிறது.
பொதுத்துறை வங்கிகள் (PSB) 2021 ஆம் ஆண்டில் 9.11% ஆக இருந்த மொத்த வாராக் கடன் அளவை 2025 ஆம் ஆண்டில் 2.58% ஆகக் குறைத்தன.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் (SCB) 2024–25 ஆம் நிதியாண்டில் (FY) 4.01 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியதுடன் வங்கி இலாபம் ஆனது சாதனை அளவை எட்டியது.
உள்நாட்டு வைப்புத் தொகை 2015 ஆம் ஆண்டில் 88.35 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 231.90 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இடர் உண்டாக்கும் சொத்துகள் மீதான மூலதன விகிதம் (CRAR) 2025 ஆம் ஆண்டில் 17.36% ஆக உயர்ந்ததுடன், மூலதன நிறைவுத் தன்மை மேம்பட்டது.