வட கர்நாடக வேளாண் வானிலையியல் (Agromet) முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்
February 20 , 2019 2358 days 744 0
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கர்நாடகாவின் தார்வாடில் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள வட கர்நாடக வேளாண் வானிலையில் முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் (North Karnataka Agromet Forecasting and Research Centre - NKAFC) தொடங்கி வைத்தார்.
இது இந்தியாவின் முதலாவது வேளாண் வானிலையியல் முன்னறிவிப்பு மையமாகும்.
இந்த மையத்தின் முதன்மையான நோக்கம் வானிலை குறித்த துல்லியமான தகவல்களைத் தருவதன் மூலம் பயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் நல்ல விளைச்சலை ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்காக விவசாயிகளுக்கு உதவுவதாகும்.
மேலும் இந்த மையமானது வெவ்வேறு வானிலைகளில் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தான அறிவை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும். எனவே விவசாயிகள் தங்களது பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடுவர்.