TNPSC Thervupettagam

வட கிழக்கு மன்றத்தின் 68வது முழுமையான அமர்வு - 2019

September 9 , 2019 2110 days 588 0
  • அசாமில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு மன்றத்தின் 68வது முழுமையான 2 நாள் அமர்விற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை தாங்கினார்.
  • வடகிழக்குப் பிராந்தியத்தின் 8 மாநிலங்களைக் கொண்டுள்ள இது வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான ஒரு முதன்மை அமைப்பாகும்.

வட கிழக்கு மன்றம்

  • இது 1972 ஆம் ஆண்டின் வடகிழக்கு மன்றச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.
  • இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை தாங்குகிறார்.
  • வட கிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர்  இதன் துணைத் தலைவராக உள்ளார்.
  • 8 வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்களும் முதலமைச்சர்களும் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்