TNPSC Thervupettagam

வடகிழக்கு இந்தியாவில் பிராந்திய இணைப்பு

February 20 , 2026 3 days 66 0
  • இந்தியப் பிரதமர் குமார் பாஸ்கர் வர்மா சேது மற்றும் அசாமில் வடகிழக்கின் முதல் அவசர தரையிறங்கும் வசதி (ELF) ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
  • குமார் பாஸ்கர் வர்மா சேது என்பது குவஹாத்தியில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் மீது சுமார் 3,030 கோடி செலவில் கட்டப்பட்ட 2.86 கிமீ நீளம் கொண்ட, ஆறு வழிச் சாலைகள் கொண்ட கிராடர்-கம்பி வட தாங்கு பாலமாகும்.
  • குவஹாத்தியையும் வடக்கு குவஹாத்தியையும் இணைக்கும் இந்தப் பாலம் வட கிழக்கு இந்தியாவின் முதல் கிராடர்-கம்பி வட தாங்கு பாலமாகும்.
  • இந்திய விமானப் படையுடன் இணைந்து திப்ருகார் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச்சாலையில் அவசர தரையிறங்கும் வசதி (ELF) உருவாக்கப்பட்டுள்ளது.
  • சுமார் 4.2 கிமீ நீளமுள்ள நெடுஞ்சாலைப் பகுதியை, போர் மற்றும் போக்குவரத்து விமானங்களை அவசரமாக தரையிறக்குவதற்கும், வட கிழக்கில் இணைப்பு மற்றும் மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்