2025 ஆம் ஆண்டில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும் என்று கணிக்கப் பட்டதற்கு மாறாக தமிழ்நாட்டில் சாதாரண வடகிழக்குப் பருவமழை (அக்டோபர்-டிசம்பர்) பதிவானது.
நீண்ட கால சம்பா-தாளடி-பிஷாணம் சாகுபடி காலத்தில் நெல் சாகுபடி பரப்பு இலக்கு எட்டப்பட்டுள்ளது.
33.9 லட்சம் ஏக்கர்கள் என்ற என்ற ஒட்டு மொத்த இலக்கிற்கு மாறாக, சாகுபடி பரப்பளவு 33.8 லட்சம் ஏக்கர்களாக இருந்தது என்ற நிலையில்அதில் சுமார் 13 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டாவிலும் மீதமுள்ளவை இம்மாநிலத்தின் இதர பிற பகுதிகளிலும் பதிவாகின.
இங்கு ஐந்து ஆண்டு காலச் சராசரி சாகுபடிப் பரப்பளவு 34.8 லட்சம் ஏக்கர் ஆகும்.
மார்ச்-செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தில் 58 செ.மீ மழைப் பொழிவு பதிவானதால், தொடர்ச்சியான நீர் கிடைப்பது அதற்கான ஒரு காரணமாக அமைந்தது.
உண்மையில், 2025 ஆம் ஆண்டில், கோடை கால மழைப்பொழிவு மிகவும் அதிகமாக இருந்தது என்ற நிலையில் அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்பதோடுஇது இயல்பை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும்.
தென்மேற்குப் பருவமழையின் போது, எதிர்பார்க்கப்பட்ட மழை அளவு 33 செ.மீ. ஆகும்.
வடகிழக்குப் பருவமழையில் எதிர்பார்க்கப்பட்ட 44 செ.மீ. மழைப் பொழிவிற்குப் பதிலாக 43 செ.மீ. மழை மட்டுமே பெய்தது என்பதோடுமேலும் நான்கு மாவட்டங்கள் (திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராணிப்பேட்டை) மட்டும் அதிகப் படியான மழையைப் பெற்றிருந்தாலும், மிகவும் போதுமான அளவு நிலத்தடி நீர் நிலை மற்றும் குறிப்பாக டெல்டாவில் கிடைக்கப் பெற்ற உபரி காவிரி நீர் காரணமாக ஓராண்டிற்கான முக்கியச் சாகுபடி பருவம் இடையூறு இல்லாமல் இருந்தது.
இந்தப் பருவத்தில், வழக்கமாக 5 லட்சம் டன்களுக்கு பதிலாக சுமார் 14.8 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
வரும் எட்டு மாதங்களில், பற்றாக்குறைப் பருவம் உட்பட, சுமார் 38 லட்சம் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2024-25 ஆம் ஆண்டில், கொள்முதல் செய்யப்பட்ட மொத்த உணவு தானியங்களின் அளவு சுமார் 48 லட்சம் டன்கள் ஆகும்.
ஆறு ஆண்டு கால உபரியான மழைப் பொழிவு போக்கிற்குப் பிறகு, வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் இயல்பை விட சற்று குறைவான மழையுடன் முடிவடையும்.
2019 ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டு காலங்களுக்கு தொடர்ந்து இயல்பான அல்லது உபரியான மழையை பெற்ற பிறகு, இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாட்டில் இயல்பை விட சற்று குறைவான மழை பதிவாக வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 42.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்பதோடுஇது பருவகால சராசரியான 43.8 செ.மீ. அளவினை விட 3% குறைவு ஆகும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 19% வரையான பற்றாக்குறை அல்லது உபரி மழையை இயல்பானதாகக் கருதுகிறது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வீசும் கிழக்கத்தியக் காற்றில் ஒரு தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், குறிப்பாக தெற்கு தமிழ்நாடு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று பிராந்திய வானிலை ஆய்வு மையம் (RMC) தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31 ஆம் தேதியை வடகிழக்கு பருவமழையின் அதிகாரப்பூர்வ முடிவாக IMD கருதுகிறது.
முந்தைய ஆண்டுகளில் பருவமழை ஜனவரி மாதத்திலும் பெய்துள்ளது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியப் பெருங்கடலில் மேக உருவாக்கம் மற்றும் மழைப்பொழிவை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பெரிய அளவிலான கிழக்கு நோக்கி நகரும் மண்டலமான மேடன்-ஜூலியன் அலைவு இல்லாதது நீடித்த வறட்சிக்கு முக்கியக் காரணமாகும்.
வெப்பமண்டல வானிலை முறைகளைப் பாதிக்கும் வளிமண்டல அலை வடிவமான பூமத்திய ரேகை ரோஸ்பி அலை, டிசம்பர் மாத தொடக்கத்தில் டிட்வா புயல் மூலம் மழைப்பொழிவுக்கு உதவியிருந்தாலும், இந்த மாநிலம் முழுவதும் பரவலான மழைப் பொழிவை மீண்டும் பெற அது போதுமானதாக இல்லை.
2020 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் சென்னையின் உபரி மழைப் பொழிவு காலம் இந்த ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது.