இடுக்கி வனவிலங்கு சரணாலயத்தில் மழைக்காலக் கணக்கெடுப்பின் போது இந்தியாவில் முதல் முறையாக வட்ட வலை/அரேனியஸ் நாக்ஸ் என்ற சிலந்தி இனம் தென்பட்டது.
இந்த இனமானது, முன்னர் பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்பட்டது.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்டக் கணக்கெடுப்பின் போது 20 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 82 சிலந்தி இனங்கள் தென்பட்டன.