அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மன்றமானது கல்லூரிகளில் நாட்டின் வட்டார மொழிகளில் மேலும் பல பாடத்திட்டங்களை வழங்குவதற்காக அதற்கான மூல ஆதாரங்களின் தரவு தளத்தினை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கல்வி துறையில் வட்டார மொழிகளை மேம்படுத்துவதற்காக இந்த முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எட்டு மாநிலங்களிலுள்ள 14 பொறியியல் கல்லூரிகளானது 5 இந்திய மொழிகளில் பொறியியல் படிப்பினைத் தொடங்க உள்ளது.
அவை வங்காளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மராத்தி.