TNPSC Thervupettagam

வணிக வர்த்தக குறியீடுகளின் அடிப்படை ஆண்டு

February 24 , 2026 2 days 49 0
  • இந்திய அரசாங்கம் 2012–13 முதல் 2022–23 வரை இந்தியாவின் வணிக வர்த்தக குறியீடுகளின் அடிப்படை ஆண்டை திருத்தியுள்ளது.
  • கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறைப் பங்கு தாரர்களுக்கு பொருத்தம், நம்பகத்தன்மை மற்றும் பகுப்பாய்வுப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளி விவர இயக்குநரகம் (DGCI&S) இந்தப் புதுப்பிப்பைச் செய்தது.
  • இந்தியாவின் பொருளாதாரத்தில் கட்டமைப்பு மாற்றங்களைப் பிரதிபலிக்கும் இந்தத் திருத்தத்தில் பொருட்களின் கலவையில் ஏற்படும் மாற்றங்கள், ஏற்றுமதி பல்வகைப் படுத்தல் மற்றும் புதிய வர்த்தக கூட்டாண்மைகள் ஆகியவை அடங்கும்.
  • இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் பேராசிரியர் நச்சிகேதா சட்டோபாத்யாய் தலைமையிலான குழு, இந்தப் புதுப்பிப்பைப் பரிந்துரைத்தது.
  • புதிய குறியீடுகளில் புதுப்பிக்கப்பட்ட பொருட்களின் உள்ளடக்கத்தில், 2022–23 வர்த்தக மதிப்புகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட மதிப்புகளில், சர்வதேச வர்த்தக வகைப்பாடுகளுடன் சீரமைப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட வர்த்தகப் பகுப்பாய்வு விதி முறைகள் (மொத்த, நிகர மற்றும் வருமான விதிமுறைகள்) ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்