வணிகப் போட்டிச் சட்டத்தின் பொருளாதாரம் குறித்த தேசிய மாநாடு
March 9 , 2023 902 days 365 0
இந்தியப் போட்டித் திறன் ஆணையம் ஆனது தனது வணிகப் போட்டிச் சட்டத்தின் பொருளாதாரம் குறித்த 8வது வருடாந்திரத் தேசிய மாநாட்டினை நடத்தியது.
இந்த மாநாடு ஆனது 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்தியப் போட்டித் திறன் ஆணையத்தினால் நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் முழு அளவிலான அமர்வு மற்றும் இரண்டு தொழில்நுட்பம் சார்ந்த அமர்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்த ஆண்டு மாநாட்டின் முழு அளவிலான அமர்வானது, ‘பொருளாதார அதிகாரக் குவிப்பிற்கான நெறிமுறை மற்றும் ஒழுங்குமுறை: இடைமுகங்கள் மற்றும் இணை திறன்கள்’ என்ற தலைப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டது.