வணிகம் சார்ந்த விண்வெளிச் சூழ்நிலை குறித்த முன்னுணர்வு ஆய்வகம்
August 25 , 2022 1093 days 610 0
இந்தியாவின் முதல் வணிகம் சார்ந்த விண்வெளிச் சூழ்நிலை குறித்த முன்னுணர்வு ஆய்வகமானது உத்தரகாண்டின் கர்வால் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
இது பூமியைச் சுற்றி வரும் 10 செமீ அளவுள்ள பொருட்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டது.
இது விண்வெளித் துறையின் ஒரு புத்தொழில் நிறுவனமான திகந்தரா என்ற அமைப்பினால் அமைக்கப் பட உள்ளது.
தற்போது, பல இடங்களில் உள்ள கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து கூடுதல் உள்ளீடுகளை வழங்கும் வணிக நிறுவனங்கள் ஆகியவை மூலம் விண்வெளிக் கழிவுகளைக் கண்காணிக்கும் ஒரு நடவடிக்கையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது.