வணிகம் செய்வதற்கான தயார் நிலை (B-READY) அறிக்கை 2024
January 5 , 2025 182 days 261 0
உலக வங்கியானது வணிகம் செய்வதை எளிதாக்குதல் அறிக்கைக்கு மாற்றாக 2024 ஆம் ஆண்டு வணிகம் செய்வதற்கான தயார் நிலை (B-READY) குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
வணிகப் பிரிவில், சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒரு நாளுக்குள் குறைந்த செலவில் இயங்கலை வழி வணிகப் பதிவு சேவையினை வழங்குகின்றன.
இந்தியாவில், வணிக நிறுவனங்கள் இன்றும் பல படிநிலைகள் மற்றும் முழுமையற்ற எண்ணிம ஒருங்கிணைப்பு செயல்முறைகளை எதிர்கொள்கின்றன.
இந்த அறிக்கையானது, ஒவ்வொரு பொருளாதாரத்திற்கும் பிரிவு சார் மதிப்பெண்கள் மற்றும் துணைப் பிரிவு சார் மதிப்பெண்கள் என இரண்டு தொகுப்பு மதிப்பெண்களை உருவாக்குகிறது.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு B-READY அறிக்கையில் இந்தியா பங்கேற்கவில்லை.