வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் வனவிலங்குகளைப் பார்வையிடுதல் (வனவிலங்கு உலா)
March 17 , 2020 2103 days 769 0
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் வனவிலங்கு உலா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை வனப்பகுதியில் ஒரு சிறிய அளவிலான மிருகக்காட்சிச் சாலையை அமைக்கப் போவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி விலங்கியல் பூங்காவானது கூடுதல் விலங்குகளுடன் நடுத்தர மிருகக்காட்சிசாலையாக மேம்படுத்தப்படும் என்றும் இவர் அறிவித்துள்ளார்.