வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் விலங்குகள் நலனுக்காக வந்தாரா (Vantara) மற்றும் மடகாஸ்கரின் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை 10 ஆண்டுகால பிரத்தியேகமற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையச் சங்கத்தால் வந்தாரா இயக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட மடகாஸ்கர் விலங்குகளை மீட்பது, மறுவாழ்வு அளிப்பது, கால்நடை மருத்துவப் பராமரிப்பு வழங்குவது மற்றும் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவது ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.
பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக மடகாஸ்கரில் தேசிய வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை அமைப்பதற்கு வந்தாரா ஆதரவளிக்கக்கூடும்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) கூற்றுப்படி, மடகாஸ்கரின் லெமூர் (Lemur) இனங்களில் சுமார் 90% அழிவின் விளிம்பில் உள்ளன.