இந்திய இரயில்வே நிர்வாகமானது புதிய வந்தே பாரத் விரைவு இரயிலினை அறிமுகப் படுத்த உள்ளது.
பயணிகளுக்குச் சிறப்பான வசதிகளை வழங்குவதற்கான அதன் தொடர் முயற்சியில் இரயில்வே நிர்வாகம் அதிவேக இரயிலாக இதனை மாற்ற உள்ளது.
முதல் வந்தே பாரத் விரைவு இரயில் ஆனது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது, இந்திய இரயில்வே நிர்வாகமானது இரயில் 18 என்றும் அழைக்கப்படும் வந்தே பாரத் விரைவு இரயிலினை இரண்டு குறிப்பிடத்தக்க வழித்தடங்களில் மட்டுமே இயக்க உள்ளது.
ஒன்று புது டெல்லியிலிருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவிற்கும் மற்றொன்று புது டெல்லியிலிருந்து வாரணாசி வரையிலும் இயக்கப்படுகிறது.