இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில், ஆயுஷ் அமைச்சகம் ஆனது புது டெல்லியில் உள்ள ஆயுஷ் பவனில் ஒரு மாபெரும் பாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தது.
1870 ஆம் ஆண்டுகளில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி அவர்களால் எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடலானது, 1882 ஆம் ஆண்டில் அவரது ஆனந்த மடம் புதினத்தில் வெளியிடப் பட்டது.
இந்தப் பாடல் 1950 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசின் தேசியப் பாடலாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் கூட்டங்களில் பகிரங்கமாகப் பாடப்பட்ட இந்தப் பாடல், நாடு முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களால் பெரும்பாலும் "வந்தே மாதரம்!" என்ற முழக்கமாகப் பயன்படுத்தப்பட்டது.
1896 ஆம் ஆண்டில், ரவீந்திரநாத் தாகூர் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வில் வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
1938 ஆம் ஆண்டில், ஐதராபாத் அரசாங்கம் ஆனது ஐதராபாத்-கர்நாடகா பகுதியில் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைத் தடை செய்தது.
இது குல்பர்காவின் வந்தே மாதரம் இயக்கத்தைத் தூண்டியது.