TNPSC Thervupettagam

வந்தே மாதரம் பாடலின் 150 ஆம் ஆண்டு நிறைவு

November 10 , 2025 2 days 18 0
  • இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில், ஆயுஷ் அமைச்சகம் ஆனது புது டெல்லியில் உள்ள ஆயுஷ் பவனில் ஒரு மாபெரும் பாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தது.
  • 1870 ஆம் ஆண்டுகளில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி அவர்களால் எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடலானது, 1882 ஆம் ஆண்டில் அவரது ஆனந்த மடம் புதினத்தில் வெளியிடப் பட்டது.
  • இந்தப் பாடல் 1950 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசின் தேசியப் பாடலாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் கூட்டங்களில் பகிரங்கமாகப் பாடப்பட்ட இந்தப் பாடல், நாடு முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களால் பெரும்பாலும் "வந்தே மாதரம்!" என்ற முழக்கமாகப் பயன்படுத்தப்பட்டது.
  • 1896 ஆம் ஆண்டில், ரவீந்திரநாத் தாகூர் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வில் வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
  • 1938 ஆம் ஆண்டில், ஐதராபாத் அரசாங்கம் ஆனது ஐதராபாத்-கர்நாடகா பகுதியில் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைத் தடை செய்தது.
  • இது குல்பர்காவின் வந்தே மாதரம் இயக்கத்தைத் தூண்டியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்