“ஜன கன மண”விற்கு இணையாக “வந்தே மாதரத்தை” அறிவிக்க மத்திய அரசிற்கு வழிகாட்டுதல் வழங்கக் கோரிய ஒரு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வந்தே மாதரம் என்பது 1870 ஆம் ஆண்டில் பக்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட ஒரு வங்க மொழிக் கவிதையாகும். இவர் இதை 1882 ஆம் ஆண்டில் தன்னுடைய நாவலான “ஆனந்தமடத்தில்” இணைத்துள்ளார்.
இந்தக் கவிதையானது இரவீந்திரநாத் தாகூரால் பாடலாக மாற்றப்பட்டது.
இது இந்திய தேசியக் காங்கிரஸின் 1896 ஆம் ஆண்டின் கல்கத்தா கூட்டத் தொடரின் போது இரவீந்திரநாத் தாகூரால் அரசியல் நோக்கில் பாடப்பட்டது.