TNPSC Thervupettagam

வந்தே மாதரம் – சட்டப் பாதுகாப்பிற்கான முன்மொழிவு

May 9 , 2026 16 hrs 0 min 6 0
  • தேசிய கீதத்தைப் போலவே 'வந்தே மாதரம்' பாடலுக்கும் சட்டப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் வகையில், தேசியக் கவுரவச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971-இல் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை முன்மொழிந்துள்ளது.
  • முன்மொழியப்பட்ட திருத்தமானது, 'ஜன கண மன' (தேசிய கீதம்) பாடலுக்கு இணையான சட்டப் பாதுகாப்பை 'வந்தே மாதரம்' பாடலுக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதையோ அல்லது பாடுவதற்கு இடையூறு விளைவிப்பதையோ தண்டனைக்குரிய குற்றமாக மாற்ற இது முயல்கிறது.
  • தற்போது, தேசிய கவுரவச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971 என்பது தேசியக் கொடி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை அவமதிப்போருக்குத் தண்டனை வழங்குகிறது.
  • தற்போதைய சட்டத்தின் கீழ், இந்தச் சின்னங்களை உள்நோக்கத்துடன் அவமதித்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
  • தேசியப் பாடலான வந்தே மாதரத்தைப் பாதுகாப்பதற்கு இந்தச் சட்டத்தின் கீழ் தற்போது குறிப்பிட்ட சட்டப் பிரிவு எதுவும் இல்லை.
  • வந்தே மாதரம் பாடலானது பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்யால் எழுதப்பட்டு, 1882 ஆம் ஆண்டு அவரது 'ஆனந்த மடம்' என்ற நாவலில் வெளியிடப் பட்டது.
  • ஆனந்தமடம் நாவலானது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த சந்நியாசிகள் கிளர்ச்சியின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.
  • 1937 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக ஏற்றுக்கொண்டது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் வந்தே மாதரத்திற்கு 'தேசியப் பாடல்' என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.
  • அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பாடலின் ஆறு பத்திகளையும் (சுமார் மூன்று நிமிடங்கள்) பாடலாம் அல்லது இசைக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
  • தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் ஆகிய இரண்டும் இசைக்கப்படும் நிகழ்வுகளில், தேசிய கீதத்திற்கு முன்னதாக தேசியப் பாடலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இருப்பினும், உள்துறை அமைச்சகத்தின் இந்த வழிகாட்டுதல்கள் அறிவுரைத் தன்மை டையவை மற்றும் இதற்குச் சட்டபூர்வமான ஆதரவு இல்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்