TNPSC Thervupettagam
July 6 , 2026 14 hrs 0 min 98 0
  • வன மகோத்சவம் 2026, இந்தியா முழுவதும் 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை வருடாந்திர "காடுகளின் திருவிழாவாக" அனுசரிக்கப்படுகிறது.
  • இது இந்தியாவின் ஒரு வாரம் நடைபெறும் மரம் நடும் திருவிழாவாகும். இதில் பள்ளிகள், அரசு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் பெருமளவிலான மரம் நடும் இயக்கங்களில் பங்கேற்கின்றனர்.
  • மரம் வளர்ப்பு மற்றும் காடு வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக அப்போதைய மத்திய வேளாண்மை மற்றும் உணவுத் துறை அமைச்சரான கே.எம். முன்ஷி என்பவரால் 1950-ஆம் ஆண்டு இந்த விழா தொடங்கப்பட்டது.
  • பருவமழையின் தொடக்கமானது புதிதாக நடப்படும் மரக்கன்றுகளின் உயிர்வாழும் விகிதத்தை அதிகரிப்பதன் காரணமாக இது ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப் படுகிறது.
  • வன மகோத்சவம் என்பது காடு வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் சமநிலை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்