ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) அமைப்பானது வனங்களுக்கான நிதி குறித்த (SFF) அறிக்கையை வெளியிட்டது.
2023 ஆம் ஆண்டில், காடுகளின் மீதான உலகளாவிய முதலீடு 84 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது.
பருவநிலை மற்றும் பல்லுயிர் இலக்குகளை அடைய 2030 ஆம் ஆண்டில் வருடாந்திர முதலீடு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க வேண்டும்.
2050 ஆம் ஆண்டில், தேவையான வன முதலீடு ஆண்டுக்கு 498 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக தோராயமாக 216 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான வருடாந்திர முதலீட்டு இடைவெளி ஏற்படுகிறது.
தனியார் வன நிதி ஆனது 2023 ஆம் ஆண்டில் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்பதோடுஇது மிகப் பிரதானமாக குறைந்த ஆபத்துள்ளச் சந்தைகளுக்கு வழங்கப் பட்டது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மானியங்கள் 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 406 பில்லியன் டாலராக இருந்தன.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தனியார் நிதி நிறுவனங்கள் அதிக காடழிப்பு அபாயத்தைக் கொண்ட நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட செயலில் உள்ள நிதியில் 8.9 டிரில்லியன் டாலர் நிதியைக் கொண்டிருந்தன.