TNPSC Thervupettagam

வனசக்தி மற்றும் இந்திய ஒன்றியம் இடையிலான வழக்கு

August 10 , 2025 12 days 65 0
  • முன் தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளை அனுமதித்த 2017 ஆம் ஆண்டு அறிவிப்பு மற்றும் 2021 ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
  • 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிவிப்பின் கீழான சுற்றுச்சூழல் அனுமதிகள் (EC) திட்டம் தொடங்குவதற்கு முன்பு பெறப்பட வேண்டும்.
  • ரத்து செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டு அறிவிப்பு முன் EC இல்லாமல் தொடங்கிய திட்டங்களுக்கு ஒற்றை முறை பொது மன்னிப்பு / தீர்வு வழங்குவதை அறிமுகப் படுத்தியது.
  • 2021 ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணை, முன் தேதியிடப்பட்ட ஒப்புதல்களை வழங்குவதற்கான நடைமுறைக் கட்டமைப்பை வழங்கியது.
  • முன் தேதியிடப்பட்ட ஒப்புதல்கள் முன்னெச்சரிக்கை கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் சட்ட விதியை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • 2021 ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணை சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாத ஒரு ஒழுங்குமுறைக் கருவியாகக் கருதப்பட்டது.
  • முன் தேதியிட்ட அனுமதிகள், விதி மீறல்களை ஊக்குவித்தன மற்றும் EIA கட்டமைப்பின் நேர்மையினை குறைமதிப்பிற்கு உட்படுத்தின.
  • முன் கூட்டியே வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளானது, ஒரு கணிசமான சட்டப் பாதுகாப்பு என்றும், வெறும் சம்பிரதாயம் அல்ல என்றும் நீதிமன்றம் கூறியது.
  • தீர்ப்புக்கு முன்னர் வழங்கப்பட்ட, கடந்த கால முன் தேதியிட்ட அனுமதிகள் சட்ட உறுதித் தன்மையைப் பாதுகாப்பதற்கான செல்லுபடித் தன்மையினைக் கொண்டு உள்ளது.
  • இந்தத் தீர்ப்புக்குப் பிறகு மேற்கொண்டு எந்தவொரு முன் தேதியிடப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்க முடியாது.
  • EC இல்லாமல் தொடங்கப்பட்டு, தீர்ப்புக்கு முன் முறைப்படுத்தலுக்கு விண்ணப்பிக்காத திட்டங்கள் அமலாக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்.
  • அமலாக்க நடவடிக்கைகளில் காரணம் கேட்பு அறிக்கைகள், நிதி அபராதங்கள், மூடல் அல்லது இடிப்பு உத்தரவுகள் ஆகியவை அடங்கும்.
  • நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்கள் (EAC) மற்றும் மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அதிகாரிகள் (SEIAAs) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் முன் தேதியிடப்பட்ட EC விண்ணப்பங்களைச் செயல்படுத்த முடியாது.
  • நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமானத்திற்கு முன், திட்ட உருவாக்குநர்கள் சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெற வேண்டும் என்று இந்தத் தீர்ப்பு கோருகிறது.
  • ஆரம்பகாலத் திட்டத் திட்டமிடல் மற்றும் ஒப்பந்தங்களில் சுற்றுச்சூழல் இணக்கத்தை ஒருங்கிணைப்பதை இது வலியுறுத்துகிறது.
  • முதலீட்டாளர்கள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) ஆபத்து மதிப்பீடுகள் மற்றும் வெளிப்படுத்தல்களில் இந்தத் தீர்ப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்