'வனத்துறையில் பல்லுயிர்ப் பெருக்கத்தை முதன்மைப்படுத்துதல்' பற்றிய அறிக்கை
October 15 , 2022 1050 days 584 0
காடுகள், மரங்கள் மற்றும் வேளாண் வனவியல் தொடர்பான சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மீதான ஆலோசனைக் குழுமத்தின் (CGIAR) ஆராய்ச்சித் திட்டத்தின் முதன்மை மையமான லாப நோக்கற்ற சர்வதேச வனவியல் ஆராய்ச்சி மையம் (CIFOR) மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டாண்மை மூலம் இந்த அறிக்கையானது தயாரிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டில், உணவு மற்றும் வேளாண் அமைப்பானது, வேளாண் துறைகளில் பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கான உத்தியை ஏற்றுக்கொண்டது.
பல்லுயிர்ப் பெருக்கத்தை முதன்மைப்படுத்துதல் என்பது இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக முக்கியப் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் கொள்கைகள், உத்திகள் மற்றும் நடைமுறைகளில் பல்லுயிர்ப் பெருக்கம் பற்றிய கருத்துகளை உட்சேர்ப்பதாகும்.
சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மீதான ஆலோசனை குழுமம் என்பது உணவுப் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவியக் கூட்டாண்மை ஆகும்.
காடுகள் உலகின் நிலப்பரப்பில் 31 சதவீதத்தை உள்ளடக்கியதோடு, 296 ஜிகா டன்கள் கார்பனைச் சேமிக்கின்றன.
உலகிலுள்ள காடுகள் 80 சதவீத இருவாழிட உயிரினங்கள், 75 சதவீத பறவை இனங்கள் மற்றும் 68 சதவீதப் பாலூட்டி இனங்களுக்கு வாழ்விடங்களை வழங்குகின்றன.
கூடுதலாக, அனைத்து வகை காற்றுச் சுவர் கொண்ட தாவரங்களில் (வாஸ்குலர் தாவரங்கள்) 60 சதவீதம் வெப்ப மண்டலக் காடுகளில் காணப் படுகின்றன.