இந்த அறிக்கையானது வனப் பிரகடன மதிப்பீட்டுக் கூட்டணியால் வெளியிடப்பட்டது.
கிளாஸ்கோவில் நடைபெற்ற 26வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP26) 2030 ஆம் ஆண்டிற்குள் காடழிப்பு மற்றும் வனச் சீரழிவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், உலகளாவிய காடழிப்பு விகிதங்கள் ஆபத்தான அளவில் அதிகமாகவே உள்ளன.
2024 ஆம் ஆண்டில், உலக நாடுகளில் பெரும்பாலும் வெப்ப மண்டலத்தில் 8.1 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலான, அதாவது ஆஸ்திரியாவின் அளவிலான காடுகள் இழக்கப் பட்டன.
கால்நடை வளர்ப்பு மற்றும் ஒற்றை வகை பயிர் தோட்டங்கள் உள்ளிட்ட வேளாண்மை நடவடிக்கையானது, கடந்த பத்தாண்டுகளில் உலகளாவிய காடழிப்பில் சுமார் 86% பங்கினைக் கொண்டுள்ளது.
வன இழப்புக்குப் பங்களிக்கும் வேளாண் மானியங்களுக்காக ஆண்டுதோறும் செலவிடப் படும் 409 பில்லியன் டாலரில் வங்களின் வளங்காப்பிற்கான பொது நிதி 1.4% மட்டுமேயாகும்.
சரக்குப் பொருட்களின் பயன்பாட்டின் காரணமாக இயக்கப்படும் காடழிப்பு அபாயங்களை ஏற்படுத்தும் நிதி நிறுவனங்களில் 40% மட்டுமே இந்த அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கும் நிர்வகிப்பதற்குமான கொள்கைகளைச் செயல்படுத்தி உள்ளன.