TNPSC Thervupettagam

வனப்பரவல் அதிகரிப்புப் பகுதி - இந்தியா

February 3 , 2022 1207 days 559 0
  • காடுகளின் பரப்பினை அதிகரித்த வகையில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 2010 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டிற்கும்  2,66,000 ஹெக்டேர் அளவிலான காடுகள் உருவாகியுள்ளன.
  • பொருளாதார விவகாரங்கள் துறையினால் அண்மையில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த தகவலானது தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மொத்தப் புவியியல் பகுதியில் 24% காடுகளால் சூழப்பட்டுள்ளது.
  • உலகில் உள்ள காடுகளில் இந்தியாவின் காடுகள் 2% ஆகும்.
  • இந்தக் கணக்கெடுப்பின் படி, பிரேசில், காங்கோ, பெரு மற்றும் ரஷ்யா ஆகியவை அதிக பட்ச காடுகளைக் கொண்ட நாடுகள் ஆகும்.
  • இந்தியாவிலேயே மத்தியப் பிரதேசம் தான் அதிக காடுகளைக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் உள்ளது.
  • காடுகளின் அதிகபட்ச விகிதம், அதாவது ஒரு மாநிலத்தின் புவியியல் பகுதியுடன் ஒப்பிடும் போது அதிக வனப்பரவலைக் கொண்ட பகுதிகள் பின்வருமாறு
    • மிசோரம்: 85%
    • அருணாச்சலப் பிரதேசம்: 79%
    • மேகாலயா: 76%

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்