உலக வனவிலங்கு நீதி ஆணையமானது, “இடையூறு மற்றும் குழப்பம்: எறும்புத் திண்ணிகளின் எண்ணிக்கை மற்றும் தந்த கடத்தல் பற்றியப் பகுப்பாய்வு 2015–2024” என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இதில் எறும்புத் திண்ணிகளின் செதில்கள் மற்றும் யானை தந்தங்களின் உலகளாவிய கடத்தல் 2020 ஆம் ஆண்டு முதல் அதிகளவில் குறைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், உலகளவில் பறி முதல் செய்யப்பட்ட எறும்புத் திண்ணிகளின் செதில்கள் 100 டன்களுக்கும் அதிகமான அளவினை எட்டின.
அந்த ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களும் 50 டன்களாக உயர்ந்தன.
2015 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலகளவில் 370 டன்களுக்கும் அதிகமான எறும்புத் திண்ணி செதில்கள் கைப்பற்றப்பட்டன.
2024 ஆம் ஆண்டில், கைப்பற்றப்பட்ட எறும்புண்ணி செதில்கள் மற்றும் தந்தங்களின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டதை விட முறையே சுமார் 84 சதவீதம் மற்றும் 74 சதவீதம் குறைந்துள்ளது.