TNPSC Thervupettagam

வனுவாட்டு மற்றும் சர்வதேச நீதிமன்றம்

July 27 , 2025 12 hrs 0 min 11 0
  • பசிபிக் நாடான வனுவாட்டு, சர்வதேச நீதிமன்றத்திற்கு (ICJ) பருவநிலை மாற்ற வழக்கைக் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
  • இந்த வழக்கானது பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவால் முன்னெடுத்து நடத்தப் பட்டது.
  • மேலும் இது 130க்கும் மேற்பட்ட உறுப்பினர் நாடுகளால் ஆதரிக்கப் படுகிறது.
  • பருவநிலை மாற்றம் தொடர்பான உறுப்பினர் நாடுகளின் சட்டப்பூர்வக் கடமைகள் குறித்து ஒரு ஆலோசனைக் கருத்தை அது கோரியது.
  • பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது குறித்து ஐ.நா.வின் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய முடிவை வழங்கி உள்ளது.
  • பருவநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகளைச் சமாளிக்க உறுப்பினர் நாடுகள் கொண்டுள்ள கடமைகள் குறித்து ஆலோசனைக் கருத்தை அது வழங்கி உள்ளது.
  • பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது சர்வதேச சட்டத்தை மீறுவதற்குச் சமம் என்று அது கூறியது.
  • இந்தத் தீர்ப்பு பிணைப்பு சாராதது என்றாலும், அது சர்வதேசப் பருவநிலை சட்டத்தை மாற்றியமைக்கக் கூடும்.
  • அமெரிக்காவும் ரஷ்யாவும் பெட்ரோலியத்தை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள் ஆகும்.
  • அமெரிக்கா மற்றும் சீனா போன்ற முக்கியப் பசுமை இல்ல வாயு உமிழ்வு நாடுகள் உட்பட அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் இந்த நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளன.
  • கரிம வெளியேற்றக் குறைப்புகளை நீதிமன்றம் கட்டாயப்படுத்துவதை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
  • கடந்த ஆண்டு, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், உலக நாடுகள் தங்கள் மக்களை பருவநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
  • 2019 ஆம் ஆண்டில், நெதர்லாந்தின் உச்ச நீதிமன்றம், பருவநிலை சார்ந்த ஆர்வலர்களுக்கு முதல் மிகப்பெரிய சட்ட ரீதியிலான வெற்றியை வழங்கியது.
  • வனுவாட்டுவைப் பொறுத்த வரை, இந்த வழக்கு ஓர் அரசியல் ரீதியிலானது அல்ல.
  • இது நீதி, கண்ணியம் மற்றும் இருப்பு உரிமைக்கான ஒரு கோரிக்கை ஆகும்.
  • வனுவாட்டு என்பது தெற்குப் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக் கூட்டம் ஆகும்.
  • இது மெலனேசியாவின் ஒரு பகுதியாகும்
  • இது வடக்கு ஆஸ்திரேலியாவின் கிழக்கிலும், பிஜியின் மேற்கிலும் அமைந்துள்ளது.
  • இந்தத் தீவுகள் எரிமலைகள் அமைந்த ஒரு தீவாகும்.
  • அவை மலைப்பாங்கான நிலப்பரப்புகள் மற்றும் கடலோர சமவெளிகளைக் கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்