வன் (சன்ரக்சன் ஏவம் சம்வர்தன்) திருத்த விதிகள், 2025
September 6 , 2025
7 days
41
- சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ஆனது 2025 ஆம் ஆண்டு வன் (சன்ரக்சன் ஏவம் சம்வர்தன்) திருத்த விதிகளை அறிவித்தது.
- 2023 ஆம் ஆண்டு வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த விதிகள் அறிவிக்கப் பட்டன.
- இந்தப் புதிய விதிகளானது, முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஆரம்ப கட்ட 'பணி அனுமதி' வழங்க மாநில அரசுகளை அனுமதிக்கின்றன.
- முன்னதாக, அத்தகைய அனுமதிகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஒட்டு மொத்த நிலைகளுக்கான முதல் நிலை அனுமதி அவசியமாகும்.
- உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு, மாநில அரசுகளுக்கான வன நிலத்தை வழங்கும் அதிகாரங்களை இந்த விதிகள் விரிவுபடுத்துகின்றன.
- பொது நலன் மற்றும் மூலோபாயத் திட்டங்கள் ஆனது தற்போது பரிவேஷ் தளம் வழியான இயங்கலை ஆய்வைத் தவிர்த்து நேரடியாக செயல்படுத்தப்படலாம்.
- இழப்பீட்டுக் காடு வளர்ப்பு (CA) நிலம் ஆனது, பாதுகாக்கப்பட்ட காடாக அறிவிக்கப்பட வேண்டியதில்லை, ஆனால் வனத்துறைக்கு மட்டுமே மாற்றப்படும்.
Post Views:
41