இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (WTI) ஆனது அபுதாபியில், Guardians of the Wild: Supporting India’s Frontline Forest Staff என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
2000 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தங்கள் கடமையின் போது கொல்லப் பட்ட அல்லது காயமடைந்த 540 இந்திய வனச் சரகர்களின் கதைகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
வன் ரக்சக்ஸ் என்று அழைக்கப்படும் இந்தியாவின் வனச்சரகர்கள், நாடு முழுவதும் 1,100க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்டப் பகுதிகள் மற்றும் பல்வேறு வன வாழ்விடங்களைப் பாதுகாக்கின்றனர்.
முன்னணி வன ஊழியர்களை வலுப்படுத்துவதற்காக, WTI ஆனது 2000 ஆம் ஆண்டில் IFAW (சர்வதேச விலங்கு நல நிதியம்) ஆதரவுடன் வன் ரக்சக் திட்டத்தை (VRP) தொடங்கியது.