வயது வந்தோரின் கல்வியறிவில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் 2025
June 15 , 2025 21 days 57 0
டெல்லி, திரிபுரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை வயது வந்தோர் கல்வியறிவு மற்றும் கல்வி தொடர்பான சவால்களைக் கையாள்வதில் சிறந்த செயல்திறன் கொண்டவை ஆகத் திகழ்கின்றன.
உத்தரக்காண்ட், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சான்றிதழ் கல்விகளில் பதிவான முடிவுகளில் பின்தங்கியுள்ளன.
இந்தத் தரவானது அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணியல் மதிப்பீட்டுத் தேர்வு (FLNAT) மூலம் வெளியிட்டப்பட்டது.
தமிழ்நாடு மாநிலமானது, FLNAT தேர்வில் கலந்து கொண்ட 5,09,694 நபர்கள் சான்றிதழ் பெற்றதுடன் 100 சதவீத வெற்றி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் மார்ச் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் இரண்டு FLNAT தேர்வுகள் நடத்தப்பட்டன.