TNPSC Thervupettagam

வயது வந்தோர் திறன் மதிப்பீட்டு ஆய்வு 2026

January 7 , 2026 2 days 39 0
  • இந்தியா தனது முதல் நாடு தழுவிய வயது வந்தோர் திறன் மதிப்பீட்டு ஆய்வை 2026 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.
  • விரிவான மாதிரி ஆய்வு (CMS) கட்டமைப்பைப் பயன்படுத்தி புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (MoSPI) இந்த ஆய்வு நடத்தப்படும்.
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) வேண்டுகோளின் பேரில் இது மேற்கொள்ளப் படுகிறது.
  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களை உள்ளடக்கிய இந்தக் கணக்கெடுப்பு  மூன்று மாதங்களுக்கு மேல் நடத்தப்படும்.
  • வயது வந்தோருக்கான திறன்கள் அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகளாக வகைப்படுத்தப்படும்.
  • வருடாந்திரத் தொழிலாளர் கணக்கெடுப்பில் (PLFS) உள்ளடக்கப்படாத உண்மையான திறன் நிலைகள் குறித்த தரவு இடைவெளியை நிரப்புவதே இந்தக் கணக்கெடுப்பின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்