இந்தியா தனது முதல் நாடு தழுவிய வயது வந்தோர் திறன் மதிப்பீட்டு ஆய்வை 2026 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.
விரிவான மாதிரி ஆய்வு (CMS) கட்டமைப்பைப் பயன்படுத்தி புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (MoSPI) இந்த ஆய்வு நடத்தப்படும்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) வேண்டுகோளின் பேரில் இது மேற்கொள்ளப் படுகிறது.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களை உள்ளடக்கிய இந்தக் கணக்கெடுப்பு மூன்று மாதங்களுக்கு மேல் நடத்தப்படும்.
வயது வந்தோருக்கான திறன்கள் அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகளாக வகைப்படுத்தப்படும்.
வருடாந்திரத் தொழிலாளர் கணக்கெடுப்பில் (PLFS) உள்ளடக்கப்படாத உண்மையான திறன் நிலைகள் குறித்த தரவு இடைவெளியை நிரப்புவதே இந்தக் கணக்கெடுப்பின் நோக்கமாகும்.