வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற இயற்கை அமைப்புத் திட்டம்
July 25 , 2021 1484 days 568 0
மத்தியப் பிரதேச அரசானது குவாலியர் மற்றும் ஓர்ச்சா ஆகிய நகரங்களில் யுனெஸ்கோவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற இயற்கை அமைப்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த இடங்களானது அவற்றின் வரலாறு மற்றும் கலாச்சார மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு யுனெஸ்கோ, இந்திய அரசு மற்றும் மத்தியப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து மேம்படுத்தப்படும்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மற்றும் ஓர்ச்சா ஆகிய நகரங்கள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் யுனெஸ்கோவின் நகர்ப்புற இயற்கை அமைப்புத் திட்டத்தின் கீழ் உலகப் பாரம்பரியத் தளங்களாக அறிவிக்கப்பட்டன.