TNPSC Thervupettagam

அமேசான் காட்டுத்தீ நிகழ்வில் சரிவு

July 28 , 2026 3 days 46 0
  • காடழிப்பு குறைதல் மற்றும் சாதகமான பருவநிலைகள் காரணமாக பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயானது, 1985 ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகக் குறைந்த அளவாகச் சரிந்துள்ளது.
  • தாமதமான மழைக்காலம், குறைக்கப்பட்ட காடழிப்பு மற்றும் தீ பரவுவதைக் கட்டுப்படுத்திய சமூகக் கண்காணிப்பு அதிகரிப்பு ஆகியவை காட்டுத்தீ குறைவதற்கு உதவின.
  • 2024 ஆம் ஆண்டில் அமேசானில் ஏற்பட்ட பெரும்பாலான தீ விபத்துகள் மனிதர்களால் தூண்டப்பட்டவை, இவை முக்கியமாக விவசாய நிலங்களைச் சுத்தம் செய்தல், காடழிப்பு மற்றும் சட்டவிரோதச் சுரங்க நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஏற்பட்டன.
  • சாத்தியமான சூப்பர் எல் நினோ (Super El Niño) நிகழ்வானது நீண்டகால வறட்சியான பருவங்களை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலக் காட்டுத்தீ அபாயங்களை அதிகரிக்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
  • அமேசான் மழைக்காடானது உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடாகும், இது ஒன்பது தென் அமெரிக்க நாடுகளில் சுமார் 6 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது, இதில் கிட்டத்தட்ட 60% பிரேசிலில் அமைந்துள்ளது.
  • அமேசான் படுகை ஒரு முக்கியப் பல்லுயிர் வளம் செறிந்த பகுதியாகும், இது உலகின் அறியப்பட்ட வனவிலங்கு இனங்களில் சுமார் 10%-ஐக் கொண்டுள்ளது மற்றும் இது உலகளாவிய ஒரு முக்கியக் கார்பன் சேமிப்புப் பகுதியாகச் செயல்படுகிறது.
  • பெருவின் ஆண்டிஸ் (Andes) மலைத்தொடரில் உற்பத்தியாகும் அமேசான் ஆறானது, நீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஆறாகும், மேலும், நைல் நதிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது நீளமான ஆறாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்