வரலாற்றுக்கு முந்தைய கால தென்னிந்திய உணவுக் கலாச்சாரம்
November 13 , 2026 17 hrs 0 min 59 0
கீழடி (தமிழ்நாடு) மற்றும் கொட்டிப்ரோலு (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் கிடைத்த பழங்கால மண்பாண்டத் துண்டுகளின் அறிவியல் பூர்வமான ஆய்வில், கிமு 600 மற்றும் கிமு 100-க்கு இடையில் பால் பொருட்கள் நுகர்வு மற்றும் தாவரங்களை பதப்படுத்தும் நடைமுறைகளுக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்தைய கால தென்னிந்தியாவில் பசும்பால் நுகர்வு மற்றும் மேம்பட்ட தாவர பதப்படுத்தும் நடைமுறைகளுக்கான சான்றுகளை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கீழடி கிமு 6 முதல் 2 ஆம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்தது, அதே சமயம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கொட்டிப்ரோலு கிமு 2 முதல் 1 ஆம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்தது.
பழங்கால உணவு எச்சங்களை கண்டறிய மேம்பட்ட அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் மண்பாண்டத் துண்டுகளை பகுப்பாய்வு செய்தனர்.
கீழடி மண்பாண்டங்களில் நிலக்கடலையுடன் தொடர்புடைய எச்சங்கள் உட்பட பல கரிம மூலக்கூறுகளின் கலவை காணப்பட்டது.