சுமார் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஆயிரக்கணக்கான டைனோசர் கால் தடங்கள் வடக்கு இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வல்லுநர்கள் இந்தத் தடங்கள் ஆனது, பிற்கால ட்ரயாசிக் காலத்தைச் சேர்ந்த நீண்ட கழுத்து கொண்ட டைனோசர்களான புரோசாரோபாட்களினுடையது என்று அடையாளம் கண்டுள்ளனர்.
கால்தட வடிவங்கள், கூட்டமான நடமாட்டம் மற்றும் இளம் டைனோசர்களைப் பாதுகாப்பதற்கான சாத்தியமான தற்காப்பு நடத்தையைக் குறிக்கின்றன.
இந்தப் பாதைகள் ஆனது டைனோசர்களின் நடமாட்டம், தொடர்பு மற்றும் இடம் பெயர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துவதால், இந்தத் தளம் அறிவியல் ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.