வரலாற்றுக்கு முந்தையக் காலகட்டத்தினைச் சேர்ந்தப் பாறை ஓவியங்கள் - குண்டூர்
June 26 , 2023 777 days 438 0
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஓர்வகல்லு கிராமத்தில், ஒரு நிலத்தில் ஒருவர் உழுது கொண்டிருப்பதைச் சித்தரிக்கும் வகையிலான ஒரு இடைக் கற்காலப் பாறை ஓவியம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இயற்கையாக உருவான ஐந்து குகைகளில், இரண்டு குகைகளின் பின் சுவர்கள் மற்றும் கூரைகளில் தனிச்சிறப்பு மிக்கச் சித்தரிப்புகளுடன் கூடிய பல பாறை ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளன.
இவை ஏறக்குறைய கி.மு. 5000 ஆம் காலக் கட்டத்தினைச் சேர்ந்த இடைக் கற்கால மக்களால் உருவாக்கப்பட்டன.