மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாகூர் ‘அசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற கொண்டாட்டத்திற்கான தொடர் நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தார்.
அந்த அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வுகள், இளம், புதிய மற்றும் சிறப்புமிக்க இந்தியாவின் இலட்சியங்கள் மற்றும் கனவுகளுடன், கடந்த கால சுதந்திரப் போராட்டத்தின் மதிப்புகள் மற்றும் மகிமைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.
தாகூர் ‘ஜான் பாகிதாரி மற்றும் ஜன் அந்தோலன்’ (Jan Bhagidari and Jan Andolan) என்ற ஒரு ஒட்டு மொத்தக் கருத்தின் கீழ் நாடு முழுவதிலிமிருந்தும் பங்கேற்பினை ஈர்க்கும் வகையிலான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாரத்தினை (Iconic Week) தொடங்கி வைத்தார்.