TNPSC Thervupettagam

வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு

February 5 , 2026 12 days 88 0
  • மொத்தம் ₹53.5 லட்சம் கோடி ஒதுக்கீட்டைக் கொண்ட 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், துறைசார் மற்றும் துறைசாரா செலவினங்களாகப் பிரிக்கப் பட்டு உள்ளது.
  • நிதி அமைச்சகத்திற்கு அதிகபட்சமாக ₹19.72 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்பதோடு இதில் வருவாய்ச் செலவினங்களுக்காக ₹17.22 லட்சம் கோடியும், மூலதனச் செலவினங்களுக்காக ₹2.50 லட்சம் கோடியும் அடங்கும்.
  • இந்த ஒதுக்கீடு வட்டி செலுத்துதல், மானியங்கள் மற்றும் மாநிலங்களுக்கான நிதிப் பரிமாற்றங்களுக்கான செலவினங்களைப் பிரதிபலிக்கிறது.
  • 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறைக்கு இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக ₹7.85 லட்சம் கோடி ஒதுக்கீட்டை அறிவித்தார்.
  • இதில் வருவாய் செலவினமாக ₹5.54 லட்சம் கோடியும், மூலதனச் செலவினமாக ₹2.31 லட்சம் கோடியும் அடங்கும்.
  • ரயில்வே அமைச்சகத்திற்கு ₹2.93 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • துறைசாரா செலவினங்கள் என்பது தனிப்பட்ட அமைச்சகங்களுக்கு ஒதுக்கப் படாத கட்டாயப் பொறுப்புகளை உள்ளடக்கியது.
  • இதில் கடந்தகாலக் கடன்களுக்கான வட்டி செலுத்துதல், பாதுகாப்பு மற்றும் குடிமைப் பணி ஊழியர்களுக்கான ஓய்வூதியங்கள், மற்றும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கான வரிப் பகிர்வு மற்றும் மானியங்கள் போன்ற சட்டப்பூர்வ நிதிப் பரிமாற்றங்கள் ஆகியவை அடங்கும்.
  • 16வது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, 2026-27 நிதியாண்டிற்காக மாநிலங்களுக்கு நிதிக் குழு மானியங்களாக அரசாங்கம் ₹1.4 லட்சம் கோடியை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்