இந்தியாவின் வரி இல்லாத சுங்கக் கட்டண முன்னுரிமைத் திட்டம் (DFTP) ஆனது 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு (LDCs) இந்தியச் சந்தையில் முன்னுரிமை அணுகலை வழங்குகிறது.
இந்தத் திட்டமானது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது, ஏற்றுமதிகளை பல்வகைப் படுத்துவது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 48 LDC நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
வரி இல்லாத சுங்க அணுகலுக்குத் தகுதியான தயாரிப்புகளில் வேளாண் பொருட்கள், ஜவுளி, கைவினைப் பொருட்கள், தோல் பொருட்கள் மற்றும் கனிமங்கள் ஆகியவை அடங்கும்.