இந்தியாவில் உள்ள வரி கழுதைப்புலியின் (Hyaena hyaena) பாதுகாப்பு நிலையானது, சிறந்த மக்கள் தொகை தரவுகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளின் தேவையினை எடுத்துக்காட்டுகிறது.
சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் வரி கழுதைப் புலி அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம் (Near Threatened) என்று பட்டியலிடப் பட்டு உள்ளது.
உலகளவில் சுமார் 5,000 முதல் 14,000 வரி கழுதைப் புலிகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது, இதில் இந்தியாவில் சுமார் 1,000 முதல் 3,000 வரை உள்ளன; இந்தியாவிடம் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு ஏதும் இல்லை.
இது முக்கியமாக இறந்த விலங்குகளின் உடல்களை உண்ணும் ஒரு துப்புரவு பேணும் விலங்காகும், மேலும் விலங்குகளின் எச்சங்களில் இருந்து நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
இது 1972 வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் மிக உயர்ந்த சட்டப் பாதுகாப்பைக் கொண்டுள்ளது, ஆனால் இந்த இனத்திற்கான ஒரு ஒருங்கிணைந்த தேசிய செயல் திட்டம் இந்தியாவில் இல்லை.
வரி கழுதைப்புலி பாதுகாப்பிற்காக தமிழ்நாடு ₹14 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.